ADDED : நவ 13, 2024 09:21 PM
தட்சின கன்னடா; அரசு பெண்கள் விடுதிக்குள் திருட்டு தனமாக நுழைந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்சின கன்னடா மாவட்டம், புத்துாரில் உள்ள அரசு பெண்கள் விடுதியில், கடந்த 6ம் தேதி, அதிகாலை 3:00 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட்டு தனமாக விடுதிக்குள் நுழைந்துஉள்ளார்.
அப்போது மாணவியர் உறக்கத்தில் இருந்துள்ளனர். விடுதியில் இருந்த ஒரு பெண் கழிப்பறைக்கு சென்று திரும்பும் போது, அவரை பார்த்துள்ளார். கூச்சலிட்டு அனைவரயும் எச்சரித்துள்ளார். அந்நபர் அங்கிருந்து உடனடியாக தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து புத்துார் மகளிர் போலீஸ், ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் அந்நப்பரின் உருவம் தெரிவதாகவும், தடயவியல் நிபுணர்களுக்கு ஆதாரங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

