sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைசூரில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

/

மைசூரில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

மைசூரில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

மைசூரில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்

1


ADDED : நவ 05, 2024 05:52 AM

Google News

ADDED : நவ 05, 2024 05:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு; கிராமப்புறம் மற்றும் தொலைதுாரம் செல்லும் பயணியர் வசதிக்காக, மைசூரு நகரில் புதிதாக கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க, அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

3,000 பஸ்கள்


அரண்மனை நகரமான மைசூருக்கு சுற்றுலா வரும் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் பலரும் ரயில், பஸ்களில் வருகின்றனர்.

தற்போது பெங்களூரு - நீலகிரி சாலை இடையே மைசூரு புறநகர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் 3,000 பஸ்கள் மாநிலத்துக்குள்ளும், வெளி மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தை மாற்றும்படி பயணியரிடம் இருந்தும் பல கோரிக்கைகள் வந்துள்ளன.

இதுதொடர்பாக கே.எஸ்.ஆர்.டி.சி., ரூரல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாஸ் கூறியதாவது:

கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு சொந்தமான 61 ஏக்கர் நிலம், பன்னிமண்டபம் மைதானத்துக்கு பின்புறம் உள்ளது.

இங்கு, 14 ஏக்கரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இரண்டு கட்டமாக பணிகள் நடக்க உள்ளன. முதல்கட்டமாக 65 கோடி ரூபாய் செலவில் தரைத்தளம் அமைக்கப்படும். கீழ் பகுதியில், உள்ளூர், வெளியூர் வந்து செல்லும் 100 பஸ்கள் நிற்கும் வகையில் கட்டப்படும். இரண்டாவது கட்டமாக 35 கோடி ரூபாயில், வர்த்தக கட்டடம் அமைக்கப்படும்.

இந்த பஸ் நிலையத்தில் 30 மின்சார பஸ்கள் சார்ஜிங் செய்ய, 'சார்ஜிங் ஸ்டேஷன்' அமைக்கப்படும். இத்துடன், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் பார்க்கிங் வசதி செய்யப்படும்.

அறிக்கை


சமீபத்தில் கூட, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார் உட்பட அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டுச் சென்றனர். அவர்களிடம் டி.பி.ஆர்., எனும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, துமகூரு, தாவணகெரேயில் உள்ள பஸ் நிலையங்களுக்கு, டி.யு.எல்.டி., எனும் நகர்ப்புற நில போக்குவரத்து இயக்குனரம் நிதியுதவி அளித்தது. மைசூரின் புதிய பஸ் நிலையத்துக்கும் நிதியதவி அளிக்க முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய கிராமப்புற பஸ் நிலையம் துவங்கிய பின், தற்போதுள்ள புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு மற்றும் அண்டைய மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொலைதுாரம் உள்ள துமகூரு, ஹுப்பள்ளி, வட கர்நாடக பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுவதால், நகரில் 50 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும்.

மைசூரு நகரம் அபிவிருத்தி அடைந்து வருவதால், அதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பும் வடிவமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

5_DMR_0010

பன்னிமண்டபம் அருகில் அமைய உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய பஸ் நிலைய வரைபடம்.






      Dinamalar
      Follow us