UPDATED : ஏப் 04, 2025 08:59 PM
ADDED : ஏப் 04, 2025 02:56 PM

புதுடில்லி: உலகில் வாழும் முக்கிய 3 மதங்களை இணைத்து ஒரே மதமாக உருவாக்கும் பெரும் முயற்சி நடந்து வருவதாக அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகம்மது இலியாஸி கூறியுள்ளார்.
இமாம் மேலும் கூறியதாவது: உலகில் வாழும் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை கொண்ட ஒரு புதிய மதம் உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன. 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம் தான். இறைவன் ஒருவனே ! என்பதும் முக்கிய கொள்கை. இந்த 3 மதத்தினரையும் இணைத்தால் மோதல்கள் குறையும்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள், அவர்கள் உறவினர்கள், சகோதரர்கள் என்றாலும், அவர்களை ஒன்றிணைக்க ஒரே வழி ஒரே மதம் தான் . வரவிருக்கும் ஆபிரகாமிய நம்பிக்கையின் மதம் உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் . 3 மதங்களையும் இணைக்கும் குரல் ஒலிக்க துவங்கி விட்டது.
இந்த புதிய மதத்திற்கு நம்பிக்கை என்ற பெயர் வைக்கப்படும். இதற்கென ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலும் ஒரு ஆபிரகாம் நம்பிக்கை மையம் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் நிச்சயமாக வேறுபட்டவை; ஆனால் அனைத்தும் ஒன்றுதான். உலகமெங்கும் மூன்று மதங்களையும் இணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அது கண்டிப்பாக வரும், ஆனால் எப்போது வரும் என்று தெரியவில்லை. இவ்வாறு இமாம் இலியாஸி கூறினார்.