ADDED : டிச 24, 2024 03:22 AM

சந்தர்ப்ப சூழ்நிலையால், மஹாராஷ்டிர அமைச்சரவையில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர்,
தேசியவாத காங்.,
தொலைநோக்கு பார்வை இல்லை!
டில்லியை பற்றி பா.ஜ.,வுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. அக்கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் கூட கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஆம் ஆத்மியையும் எப்படி துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே பா.ஜ.,வுக்கு தெரியும்.
அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய ஒருங்கிணைப்பாளர்,
ஆம் ஆத்மி
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு!
உத்தர பிரதேசத்தை குற்றம் செய்வதற்கு உகந்த மாநிலமாக, ஆளும் பா.ஜ., அரசு மாற்றி உள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துஉள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி