உயரமான மெட்ரோ ரயில் நிலையம் ரூ.200 கோடியில் கட்ட திட்டம்
உயரமான மெட்ரோ ரயில் நிலையம் ரூ.200 கோடியில் கட்ட திட்டம்
ADDED : மார் 01, 2024 06:21 AM
பெங்களூரு: பெங்களூரில் மிக உயரமான மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது.
இதுகுறித்து, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில், மெட்ரோ ரயில் பொது மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது. நாட்டிலேயே மிக சிறந்த போக்குவரத்து சேவை வழங்கும் போக்குவரத்துக் கழகங்களில் ஒன்றாக உள்ளது.
குறிப்பாக பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பயணியருக்கு, 'நம்ம மெட்ரோ' வரப்பிரசாதமாக உள்ளது.
விரைவில் நாட்டிலேயே மிக உயரமாக 95 அடி உயரத்தில், ஜெயதேவா மெட்ரோ ரயில் நிலையம், பெங்களூரில் கட்டப்பட உள்ளது. இது நகரின் பெருமையை அதிகரிக்கும். இதற்காக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. ஆறு கட்டங்களில் பணிகள் நடக்கின்றன.
ஜெயதேவா மருத்துவமனை அருகிலேயே, கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலைய மெட்ரோ பாதை, 18 கி.மீ., துாரம் கொண்டது. இந்த பாதையில், 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும்.
பணிகள் முடிந்தால், சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி குறையும். பனசங்கரி, சில்க் போர்டு செல்லும் பயணியருக்கு உதவியாக இருக்கும். பயணியரின் நலனை கருதி, விரைவில் பணிகளை நடத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

