தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி
தன்னிறைவு கொண்ட மாநிலம்; ஹரியானாவை மாற்ற முதல்வர் உறுதி
ADDED : அக் 18, 2024 02:35 PM

சண்டிகர்: ஹரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.
ஹரியானா முதல்வராக, பா.ஜ.,வின் நயாப் சிங் சைனி, 54, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பேசியதாவது: எங்களது அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் செயல்படும். குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹரியானா மாநிலத்தில் தனது 2.80 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு அயராது சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மாநிலத்தின் தலைமை ஊழியராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
ஹரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், முழு பெரும்பான்மையுடன் எங்களின் அரசாங்கம் சேவை செய்யும். நல்லாட்சி, சமத்துவம், செழிப்பு மற்றும் ஏழை நலனுக்காக அரசு செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.