sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!

/

விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!

விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!

விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!

9


UPDATED : டிச 30, 2025 12:59 PM

ADDED : டிச 30, 2025 11:41 AM

Google News

9

UPDATED : டிச 30, 2025 12:59 PM ADDED : டிச 30, 2025 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது சிறப்பு நிருபர்

சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபி தொகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இது குறித்து ஓர் சிறப்பு அலசல்!

கொளத்தூர் தொகுதி (முதல்வர் ஸ்டாலின்)

முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி சிறிய தொகுதியாக இருந்தாலும் அங்கு எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்குப் பின், இறந்தோர், தொகுதி மாறியோர், விடுபட்டவை என ஒரு லட்சத்து 3,812 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஒரே முகவரி, இரண்டு இடங்களில் ஓட்டு வைத்திருக்கும் நபர்களும் கண்டறியப்பட்டு உள்ளனர்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி (உதயநிதி)

துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89 ஆயிரத்து 241 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு உள்ளன.

மதுரை கிழக்கு தொகுதி (அமைச்சர் மூர்த்தி)

அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதி தமிழகத்தில் 2வது பெரிய தொகுதி. 3.70 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் உள்ளது. இங்கு, ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. எஸ்ஐஆர் பணியின் போது, 20 ஆயிரம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டு உள்ளன.

போடி தொகுதி (பன்னீர் செல்வம்)

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியில், சில பாகங்களில் ஒரே வீட்டு எண்ணில் பல வாக்காளர்கள் வசிப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

உதாரணமாக, முந்தல் ஆதிதிராவிடர் காலனி, 93 பேர், கொட்டக்குடி, குரங்கணியில் 87 பேர், பூதிப்புரம், கோட்டை மேட்டுத்தெருவில் 73 பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 24 ஆயிரத்து 386 பேர் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் பணியில் மொத்தமாக தேனி மாவட்டத்தில், 1.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

காட்பாடி தொகுதி (அமைச்சர் துரைமுருகன்)

அமைச்சர் துரை முருகனின் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 35 ஆயிரத்து 666 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இறந்தோர், இரட்டை இடத்தில் ஓட்டுப்பதிவு உட்பட பல்வேறு காரணங்களால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.

எடப்பாடி தொகுதி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான இபிஎஸ்சின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 26 ஆயிரத்து 375 வாக்காளர்களின் பெயர்களானது நீக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

ஆலந்தூர் தொகுதி (அமைச்சர் அன்பரசன்)

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆலந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 3 தொகுதிகளில் ஆலந்தூரும் ஒன்று ஆகும்.

திருநெல்வேலி தொகுதி (நயினார் நாகேந்திரன்)

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி தொகுதியில் 42ஆயிரத்து 119 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.

திருவெறும்பூர் தொகுதி (அமைச்சர் மகேஷ்)

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெற்றி பெற்ற திருவெறும்பூர் தொகுதியில் 39 ஆயிரத்து 983 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதி (அமைச்சர் நேரு)

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில் 57 ஆயிரத்து 339 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us