ADDED : பிப் 14, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய டில்லி படேல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணியர் ரயிலின் ஒரு பெட்டி, நேற்று மதியம் தீப்பற்றி எரிந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
படேல் நகர் ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில், சிர்சா எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில், நேற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு பெட்டி, நேற்று மதியம் 1:30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து ஐந்து வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். மதியம் 2:25 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்து ஏற்பட்ட போது ரயிலில் பயணியர் யாரும் இல்லை.எனவே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

