டீசல் இன்ஜினில் 'சூப்பர்ப்' கார்? ஸ்கோடா எடுத்த 'யூ - டர்ன்'
டீசல் இன்ஜினில் 'சூப்பர்ப்' கார்? ஸ்கோடா எடுத்த 'யூ - டர்ன்'
ADDED : ஜன 22, 2025 12:44 AM

புதுடில்லி:'ஸ்கோடா' நிறுவனம், ஏழு கார்களை காட்சிப்படுத்தியது. இதில் ஐந்து இன்ஜின் கார்கள், இரண்டு மின்சார கார்கள்.
'கோடியாக்' எஸ்.யூ.வி., கார் நடப்பாண்டு ஜூனிலும், 'சூப்பர்ப்' செடான் கார் ஆண்டு இறுதியிலும் அறிமுகமாக உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு பின், சூப்பர்ப் கார், டீசல் இன்ஜினில் வர இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2020க்குப் பின், 'ஆக்டோவியா ஆர்.எஸ்.,' கார், இந்தியாவுக்கு வருவதால், கார் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
'எல்ராக்' மின்சார கார், இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் ஸ்கோடாவின் முதல் மின்சார காராகும். இந்த கார், 52, 59 மற்றும் 77 கி.வாட் ஹார்., என மூன்று வகை பேட்டரிகளில் வருகிறது.
'ஸ்கோடா விஷன் 7எஸ்' கார், இந்நிறுவனத்தின் மின்சார முன்மாதிரி காராகும். இந்த 7 சீட்டர் கார், 2026ல் உற்பத்திக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த இரு மின்சார கார்களும் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.