ADDED : ஜன 16, 2024 07:16 PM

போபால்: மத்திய பிரதேச தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலிகளில் செளரியா என்ற சிவிங்கிப்புலி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சிவிங்கி புலிகள் அழிந்து வருவதை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும், கொண்டு வரப்பட்டன. இவற்றை 2022-ம் தேதி செப்டம்பர் மாதம் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.
இந்த சிவிங்கிப்புலிகள் தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சீறுநீரக தொற்று, இனச்சேர்க்கையின் ஏற்பட்ட மோதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டில் கடந்தாண்டில் 9 சிவிங்கிபுலிகள் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று செளரியா என்ற சிவிங்கிப்புலி உயிரிழந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து உடற்கூராய்வுக்கு பின் தெரியவரும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த சிவிங்கிப்புலிகள் எண்ணிக்கை 10 உயர்ந்துள்ளது. இப்பூங்காவில் சிவிங்கிப்புலிகள் இறப்பு தொடர்கதையாகி வருகிறது.