ADDED : செப் 18, 2024 07:50 PM

கரோல் பாக்:மத்திய டில்லி பாபா நகரில் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
மத்திய டெல்லியின் பாபா நகரில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்
மத்திய டில்லியின் பாபா நகரில் நேற்று காலை இரண்டு மாடிகள் கொண்ட பழைய வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு நேற்று காலை 9:11 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்தன. இடிபாடுகளுக்கு இடையே அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர்.
இதனால் மீட்புப்பணிகள் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

