ADDED : நவ 15, 2024 11:07 PM

குட்டீஸ்களுக்கு காய்கறிகள் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். இவர்களை காய்கறி சாப்பிட வைப்பதற்குள், தாய்மார்களுக்கு போதும் போதும் என்றாகும். இது வீடுகளில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. குட்டீஸ்களை காய்கறிகளை சாப்பிட வைக்க வேண்டுமா? வெஜிடபிள் பான் கேக் செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள்
l வெங்காயம் - 3
l முட்டைகோஸ் - ஒரு கப் நறுக்கியது
l பீட்ரூட் - ஒரு கப் நறுக்கியது
l குட மிளகாய் - ஒரு கப் வெட்டியது
l துருவிய கேரட் - ஒரு கப்
l கொத்துமல்லி - 4 ஸ்பூன் நறுக்கியது
l அரிசி மாவு - 4 ஸ்பூன்
l சோளமாவு - 4 ஸ்பூன்
l இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
l பச்சை மிளகாய் - நான்கு
l கரம் மசாலா - 1 ஸ்பூன்
l அமெச்சூர் துாள் - ஒரு ஸ்பூன்
l உப்பு - சுவைக்கு தேவையான அளவு
l எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில், அனைத்து காய்கறிகளையும் போட்டுக் கொள்ளுங்கள். இதில் பச்சை மிளகாய், உப்பு, சோளமாவு, அரிசி மாவு, கரம் மசாலாவை போட்டு நன்றாக கலக்குங்கள். 10 நிமிடங்கள் அதை ஊற வையுங்கள். அதன்பின் அமெச்சூர் துாள், கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு, மீண்டும் கிளறுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து, அடிகனமான பான் வைத்து எண்ணெய் தடவுங்கள். காய்கறி கலவையை போட்டு கையால் தடிமனாக பரப்புங்கள். அதை மூடி, மிதமான தீயில் வேக வையுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடுங்கள். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் அடுப்பை அணையுங்கள். அதன்பின் அதை விருப்பமான வடிவத்தில் வெட்டி, குட்டீஸ்களுக்கு கொடுக்கலாம். ஒரே நிமிடத்தில் தட்டு காலியாவது உறுதி. டயட்டில் இருப்பவர்களும் கூட, வெஜிடபிள் பான் கேக் சாப்பிடலாம்.
