ADDED : அக் 09, 2024 10:56 PM
மாதநாயகனஹள்ளி: qகுடும்ப பிரச்னையால், மகனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூரு, தோடதகுட்டதஹள்ளியின் பிரக்ருதி லே அவுட்டில் வசித்தவர் முனிராஜு, 45. குடும்ப பிரச்னையால் இவருக்கும், இவரது மனைவிக்கும் அவ்வப்போது சண்டை நடக்கும்.
முனிராஜு குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் 40 வயது மனைவியும், 20 வயது மகனும் புத்திமதி கூறியும் திருந்தவில்லை. நேற்று முன்தினம் இரவும் சண்டை நடந்தது. அப்போது மனைவியும், மகனும் முனிராஜுவை சரமாரியாக தாக்கினர்.
தாக்குலுக்கு ஆளாகி காயமடைந்த அவர், வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கோவில் அருகில் படுத்திருந்தார். அதிகாலை காயங்களுடன் இருந்ததை பார்த்த அப்பகுதியினர், மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாதநாயகனஹள்ளி போலீசார், முனிராஜு மனைவி, மகனிடம் விசாரிக்கின்றனர்.