கணவன் ஆயுளுக்காக விரதமிருந்த மனைவி : தகராறில் விஷம் கொடுத்து கொன்ற கொடுமை
கணவன் ஆயுளுக்காக விரதமிருந்த மனைவி : தகராறில் விஷம் கொடுத்து கொன்ற கொடுமை
UPDATED : அக் 21, 2024 09:06 PM
ADDED : அக் 21, 2024 08:44 PM

லக்னோ: கணவனின் நீண்ட ஆயுளுக்காக கர்வா சவுத் என்ற விரதம் இருந்த மனைவி, தன் கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.
டில்லி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட் ,உத்தரபிரதேசம் என வட மாநிலங்களில் கர்வா சவுத் விரதத்தையொட்டி பெண்கள் உண்ணா நோன்பு இருப்பர். இந்நோன்பை கடைபிடிப்பதன் மூலம் தங்களின் மாங்கல்யம் பலமுடனும், கணவளுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்யமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில் உ.பி. மாநிலம் கவுஷாம்பி மாவட்டம் லால்பகதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சைலேஷ் குமார் 32, என்பவரும் சவீதா,26 என்பவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். தன் கணவன், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி கர்வா சவுத் விரதம் மேற்கொண்டார் சவீதா.
நேற்று மாலை விரதத்தை முடிந்த நிலையில் கணவனுக்கு உணவு பரிமாறினார். உணவு அருந்திய சைலேஷ்குமாருக்கு திடீர் உடலக்குறைவு ஏற்படவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சகோதரர் . அங்கு சிகிச்சை பலனின்றி சைலேஷ்குமார் இறந்தார். விசாரணையில் சைலேஷ்குமாருக்கு மனைவி சவீதா தான் உணவில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சவீதாவிடம் நடத்திய விசாரணையில் தன் கணவர் சைலேஷ் குமார் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை பல முறை கண்டித்தும் கேட்காததால் இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு, வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று விரதம் முடித்தவுடன், கணவனுக்கு உணவில் விஷம் கொடுத்து கொன்றதாக சவீதா கூறினார். சைலேஷ்குமார் சகோதரர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து சவீதாவை கைது செய்தனர்.