தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்

இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்

இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்


UPDATED : ஏப் 21, 2026 05:26 PM

ADDED : ஏப் 21, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 05:26 PM ADDED : ஏப் 21, 2026 01:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணியரின் வருகை குறைந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. பதிவில், ''மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, ​​இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது.

இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் கிடையாது என்று இந்திய ராணுவம் தெளிவுப்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us