தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காதலியை கொலை செய்த வாலிபரும் தற்கொலை

 காதலியை கொலை செய்த வாலிபரும் தற்கொலை

 காதலியை கொலை செய்த வாலிபரும் தற்கொலை


ADDED : பிப் 15, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நொய்டா: காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வாலிபர், தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டில்லி அருகே நொய்டா 107வது செக்டார் தாத்ரி சாலையில், 84வது துாண் அருகே ஒரு காருக்குள் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து வந்தனர். டில்லி பதிவெண் கொண்ட காருக்குள் வாலிபர் மற்றும் இளம் பெண் உடல்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்தன. இரு உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

நொய்டா போலீஸ் துணைக் கமிஷனர் மனிஷா சிங் கூறுகையில், “தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்கள் பூட்டியிருந்த காருக்குள் கிடந்தன.

வாலிபர் கையில் துப்பாக்கி இருந்தது. இறந்து கிடந்தவர்கள் டில்லி திரிலோக்புரியைச் சேர்ந்த சுமித் மற்றும் நொய்டா 101வது செக்டாரை சேர்ந்த ரேகா என தெரிய வந்துள்ளது. இரு குடும்பத்தினரிடமும் விசாரித்து வருகிறோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us