ADDED : ஜன 07, 2025 09:19 PM
புதுடில்லி:சமூக ஊடகங்களைக் கண்காணித்த போலீசார், 23 வயது இளைஞர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெற்கு டில்லி அம்பேத்கர் நகர் பிஆர்.டி., சாலையில் வசிப்பவர் ரோஹித்,23. திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமினில் வந்தார்.
ரவுடிகள் மற்றும் தாதாக்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ரோஹித், தன்னையும் ஒரு ரவுடியாக நினைத்துக் கொண்டார். ஜாமினில் வந்த ரோஹித் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். மேலும், அவரது சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்பட்டன. சமூக ஊடகத்தில், துப்பாக்கி வைத்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

