உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 28, 2026 06:04 PM

அ நிறம் | அளவு
சண்டிகர்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப்பில் 8 மாநகராட்சிகள், 75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (மே 26) நடைபெற்றது. இந்த ஓட்டுப்பதிவின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. ராய்கோட் பகுதியில் 4வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதேவ் சிங் ஜக்கா ஆம் ஆத்மி தொண்டர்களால் தாக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவரும், 42வது வார்டு வேட்பாளருமான ஜெய்பால் சிங் பாவ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
