ADDED : அக் 17, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்ரம்நகர்:டில்லியில் காற்று மாசுபாட்டிற்கு பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அறுவடை வயல்கள் எரிக்கப்படுவதே முக்கியப் பங்காற்றுவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜாஸ்மின் ஷா வெளியிட்ட அறிக்கையில், டில்லி மற்றும் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசுகள் மட்டுமே மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1 முதல் 14 வரையிலான காலகட்டத்தை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பஞ்சாபில் அறுவடை வயல்கள் எரிக்கும் சம்பவங்கள் 27 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பா.ஜ., ஆளும் உ.பி., மற்றும் ஹரியானாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஷா கூறினார்.