கெஜ்ரிவால் வீட்டில் கைகலப்பு: பெண் எம்.பி.,மீது தாக்குதலா?
கெஜ்ரிவால் வீட்டில் கைகலப்பு: பெண் எம்.பி.,மீது தாக்குதலா?
ADDED : மே 13, 2024 11:56 AM

புதுடில்லி: ஜாமினில் இருந்து வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் அவரது கட்சி பெண் எம்பி.,யுடன் கைகலப்பு ஏற்பட்டதாக போலீசுக்கு போன் வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கெஜ்ரிவால் வீட்டிற்கு அவரது கட்சி எம்பி., சுவாதி மாலிவால் சென்றுள்ளார். இவரது வீட்டில் இருந்த முதல்வரின் உதவியாளர் வைபவ்குமார் என்பவருக்கும் பெண் எம்பி மாலிவாலுக்கும் காரசார விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் வைபவ், மாலிவாலை தாக்கியதாக தெரிகிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது எம்பி., எவ்வித ஆதரவு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வைபவ் குற்றம்சாட்டி விவாதம் நடந்ததாக தெரிகிறது.
போலீசார் விரைந்து வந்தபோது மாலிவால், முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இல்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்வர் வீட்டில் பெண் எம்பி., தாக்கப்பட்டார் என்ற தகவல் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.