போட்டியில்லை... பிரசாரம் மட்டும் தான்; மஹாராஷ்டிரா தேர்தலில் ஆம்ஆத்மி முடிவு
போட்டியில்லை... பிரசாரம் மட்டும் தான்; மஹாராஷ்டிரா தேர்தலில் ஆம்ஆத்மி முடிவு
ADDED : அக் 26, 2024 06:39 PM

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாத நிலையில், மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவ., 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி, பா.ஜ. தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ள மஹா விகாஸ் அகாதி கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.
லோக் சபா தேர்தலில் சில மாநிலங்களில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம்ஆத்மி, மஹாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. மேலும், மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு ஆதரவாக ஆம்ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி ராஜ்ய சபா எம்.பி., சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் கட்சிக்கு ஆதரவாகவும் கெஜ்ரிவால் ஓட்டு சேகரிப்பார் என்றும் அவர் கூறினார்.