தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது

 போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது

 போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது


ADDED : மே 23, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 02:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, 38 வயது நபரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

தென்மேற்கு டில்லி, ஜாபர்பூர் கலானைச் சேர்ந்தவர், ரிங்கு என்ற மோனு, 38. இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், ஜாபர்பூர் கலான் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளியில் வந்த மோனு, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வந்தார்.

திடீரென்று அவர் தலைமறைவானார். இதையடுத்து, 2025, ஏப்., 4ல், அவரை தேடப்படும் குற்றவாளியாக துவாரகா நீதிமன்றம் அறிவித்தது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில், காசிபூர் பகுதியில் மோனு தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு முகாமிட்ட போலீசார், மோனுவை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us