தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தலைமறைவான எம்.எல்.ஏ., 6 மாதங்களுக்கு பின் கைது ஆறு மாதங்களுக்கு பின் கைது

 தலைமறைவான எம்.எல்.ஏ., 6 மாதங்களுக்கு பின் கைது ஆறு மாதங்களுக்கு பின் கைது

 தலைமறைவான எம்.எல்.ஏ., 6 மாதங்களுக்கு பின் கைது ஆறு மாதங்களுக்கு பின் கைது


ADDED : மார் 26, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்டியாலா: பாலியல் பலாத்கார வழக்கில், போலீசாரிடம் இருந்து தப்பி ஆறு மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சனவுர் தொகுதியில், அக்கட்சியைச் சேர்ந்த ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

திருமணமான இவர் மீது, பாட்டியாலா சிவில் லைன்ஸ் போலீஸ் ஸ்டேஷனில், கடந்தாண்டு செப்டம்பரில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

அதில், 'என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்தார். தொடர்ந்து பணம் பறித்தார். திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, மிரட்டல் விடுத்தார்' என, தெரிவித்திருந்தார்.

பாலியல் பலாத்காரம், மோசடி, மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பதன்மஜ்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்தாண்டு செப்டம்பரில் ஹரியானாவின் கர்னல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் பதன்மஜ்ராவை கைது செய்தனர்.

அப்போது, அவரின் ஆதரவாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்; துப்பாக்கியால் சுட்டனர். இதை பயன்படுத்தி, போலீசாரிடம் இருந்து பதன்மஜ்ரா தப்பிச் சென்றார்.

அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், கைது செய்ய உத்தரவிட்டது. கடந்த ஆறு மாதங்களாக பாட்டியாலா போலீசார் பல்வேறு குழுக்கள் அமைத்து அவரை தேடி வந்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் குவாலியரில் அவர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us