ADDED : அக் 15, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி வேறுபாட்டால், வருத்தம் அடைந்துள்ள சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, புத்த மதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் கூறியதாவது:
ஹிந்து மதம், ஜாதி பிரிவினை என்ற நோயால் அவதிப்படுகிறது. ஹிந்து மதம் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
மக்களின் முன்னேற்றத்துக்கு, கருணை, சமத்துவம், தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியம். ஆனால் என் அனுபவத்தில், ஜாதி வேற்றுமையில் இருந்து விடுபடுவதற்கானஅறிகுறிகள் தென்படவில்லை.
எனவே சமத்துவம், அமைதியை போதிக்கும் புத்த மதத்தை ஏற்க, நான் முடிவு செய்துள்ளேன். வரும் நாட்களில் புத்த மதத்தை பற்றி, இந்தியாவில் பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.

