ADDED : மார் 22, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணஜி: கோவாவின் தென் பகுதியில் உள்ள நஹ்கோரி - பெட்டுல் கிராமத்தில் சேமிப்பு கிடங்குடன் கூடிய வெடிபொருள் உற்பத்தி ஆலை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த சேமிப்பு கிடங்கில் திடீரென விபத்து ஏற்பட்டு, கிடங்கு முழுதும் தீ பரவியது. சேமிப்பு கிடங்கு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதில், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடி விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்பை 15 கி.மீ., தொலைவில் உள்ள அகோன்டா கடற்கரையிலும் காண முடிந்ததாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 'விசாரணைக்கு பின்பே வெடி விபத்துக்கான காரணம் தெரிய வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.