மாணவிகளை சீரழித்த குற்றவாளி சுட்டுக்கொலை : போலீசில் பிடியில் தப்ப முயன்ற போது சம்பவம்
மாணவிகளை சீரழித்த குற்றவாளி சுட்டுக்கொலை : போலீசில் பிடியில் தப்ப முயன்ற போது சம்பவம்
ADDED : செப் 23, 2024 08:18 PM

தானே: மும்பையில் நர்சரி பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசில் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு தனியார் பள்ளியில் இரு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டதாக புகார் எழுந்ததையடுத்து மாநிலம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. ரயில் நிலையங்களில் நடந்த போராட்டத்தால் உள்ளூர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பள்ளியில் துப்புரவு பணியாளர் அக்சய் ஷிண்டே என்பவரை கடந்த ஆக.17-ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஆக.01-ம் தேதியன்று அக்சய் ஷிண்டே பள்ளி கழிவறையில் வைத்து இரு மாணவிகளையும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் தலோஜா சிறையிலிருந்து விசாரணைக்காக இன்று மாலை அக்சய் ஷிண்டேயை போலீசார் வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது போலீசில் பிடியிலிருந்து தப்பியோட முயன்றதாகவும், அப்போது ஒரு போலீசாரிடமிருந்த துப்பாக்கியை பறித்து போலீசாரை சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது தற்காப்புக்காக சக போலீஸ்காரர் அக்சய் ஷிண்டேயை சுட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
**********************