உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 05, 2024 02:16 AM
அ நிறம் | அளவு
'கோழைத்தனமான செயல்'
சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு:
கனடாவில் ஹிந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதே போல, நம் துாதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானவை. இத்தகைய வன்முறை செயல்கள், இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
