sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜ்யசபாவுக்குள் வருகிறார் அதிரடி தமிழ் எம்.பி.,

/

ராஜ்யசபாவுக்குள் வருகிறார் அதிரடி தமிழ் எம்.பி.,

ராஜ்யசபாவுக்குள் வருகிறார் அதிரடி தமிழ் எம்.பி.,

ராஜ்யசபாவுக்குள் வருகிறார் அதிரடி தமிழ் எம்.பி.,

21


ADDED : பிப் 15, 2026 05:23 AM

Google News

21

ADDED : பிப் 15, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் ஏப்ரலில், ராஜ்யசபாவிலிருந்து, 37 எம்.பி.,க்கள் ஓய்வு பெறுகின்றனர். இதில், காங்கிரசின் திக்விஜய் சிங்கும் ஒருவர். ம.பி., முன்னாள் முதல்வரான இவர், 'எனக்கு மீண்டும் எம்.பி., பதவி வேண்டாம்' என, சொல்லி விட்டார்.

'இவருக்கு பதிலாக யார் காங்கிரசிலிருந்து எம்.பி.,யாக போகிறார் என்பதை முடிவு செய்து விட்டாராம் ராகுல். அவர், மீனாட்சி நடராஜன்' என்கின்றனர் காங்கிரசார். ஏற்கனவே லோக்சபா எம்.பி.,யாக இருந்தவர் மீனாட்சி. தமிழராக இருந்தாலும், ம.பி.,யைச் சேர்ந்தவர்.

தமிழ் அதிகமாக தெரியாது. நம்ம ஊர் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போல, மீனாட்சியும் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர். லோக்சபாவில், பா.ஜ.,விற்கு தலைவலி தர ஜோதிமணி, சுதா போன்ற பெண் எம்.பி.,க்கள் உள்ளனர்.

சமீபத்தில், 'பிரதமர் மோடி சபைக்கு வராததற்கு இவர்கள் தான் காரணம்' என, சொல்லப்பட்டது. இதே போல அதிரடியாக ராஜ்யசபாவில் செயல்பட காங்கிரசில் யாரும் இல்லை.

மல்லிகார்ஜுன கார்கே போன்ற வயதான எம்.பி.,க்களால், ராஜ்யசபாவில் பா.ஜ.,வை தாக்க முடியவில்லை. இதனால், 52 வயதான மீனாட்சி நடராஜனை, ராஜ்யசபா எம்.பி.,யாக நியமித்தால், அவரது நடவடிக்கைகள் பா.ஜ.,வுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், எம்.பி.,யாக்க ராகுல் முடிவு செய்துள்ளாராம்.

பா.ஜ., வட்டாரங்களில் மீனாட்சியை, 'அர்பன் நக்சல்' என அழைக்கின்றனர். இவர் ராஜ்யசபாவிற்கு வந்தால், லோக்சபா போல ராஜ்யசபாவிலும் அடிதடி ஏற்படலாம்.






      Dinamalar
      Follow us