ADDED : டிச 18, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி; “மாநிலத்தில் அழிவின் பிடியில் உள்ள, உள்நாட்டு இன ஆடுகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் யதீந்திராவின் கேள்விக்கு அமைச்சர் வெங்கடேஷ் அளித்த பதில்:
கடந்த 2019 கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 110.51 லட்சம் ஆடுகள், 61.69 கிடாக்கள் இருந்தன. மாண்டியா, ஹாசன், பல்லாரி, டெகனி, கெங்குரி, யளகா, பிதரி என, பல்வேறு இனங்களைச் சேர்ந்த கிடாக்கள் உள்ளன.
அழிவின் பிடியில் உள்ள, உள் நாட்டு இன ஆடுகளை பாதுகாக்க, ஐந்து ஆடு, கிடாக்கள் இன விருத்தி மையங்கள் அமைக்கப்படும். இம்மையங்கள் மூலமாக, சலுகை விலையில் ஆடுகள், கிடாக்களின் குட்டிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

