புஷ்பா படத்தால் பெண் பலியான சம்பவம்! ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்த அல்லு அர்ஜூன்
புஷ்பா படத்தால் பெண் பலியான சம்பவம்! ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்த அல்லு அர்ஜூன்
ADDED : டிச 07, 2024 07:08 AM

ஹைதராபாத்; புஷ்பா 2 பட திரையரங்க நெரிசலில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவின் போது படம் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
பட பிரிமியர் காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிக மந்தனா இருவரும் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி உயிரிழந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இந்த சம்பவம் குறித்து அல்லு அர்ஜூன் தமது வருத்தத்தை வீடியோ வடிவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
திரையரங்கில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஆழ்ந்த மனவேதனையை தருகிறது. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வேதனையில் அவர்கள் தனியாக இல்லை என்றும், குடும்பத்தை நேரில் சந்திப்பேன் என்றும் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். சவாலான பயணத்தில் அவர்கள் செல்ல உதவுவதற்கு சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டு உள்ளேன்.
இவ்வாறு அல்லு அர்ஜூன் கூறி உள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாகவும் அறிவித்துள்ளார்.