ADDED : ஜன 10, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நடப்பாண்டு நடக்கும் 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவின் துாதராக, நடிகர் கிஷோர் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக திரைப்பட அகாடமி சார்பில் 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழா, மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக, சமீபத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
இத்திருவிழாவை விளம்பரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தமிழில் ஆடுகளம், வெண்ணிலா கபடிகுழு உட்பட பல படங்களில் நடித்த கிஷோர் குமாரை, திருவிழா துாதராக மாநில அரசு அறிவித்துள்ளது. எட்டு நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், தென் மாநிலங்கள் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக பெங்களூரில் 13 அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

