sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

/

வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

வயநாடு பகுதியில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்

4


ADDED : ஆக 03, 2024 08:48 PM

Google News

ADDED : ஆக 03, 2024 08:48 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு; வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளை இன்று ராணுவ உடையில் ஆய்வு செய்தார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்.

கேரளாவில் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 295-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வயநாட்டில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் மீட்பு பணிகளை மலையாள நடிகர் மோகன்லால் ஆய்வு செய்தார்.

அப்போது ராணுவ உடையணிந்து வந்தார். மோகன்லாலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று (04.08.2024)முண்டக்ககை பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதியை ராணுவ உடையில் அவர் நேரில் பார்வையிட்டார். மீட்பு பணிகளை மேற்கொள்ள நடிகர் மோகன்லால் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். ராணுவ முகாமில் வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us