sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடிகர் ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு பேரம்: அமெரிக்காவில் இருந்து பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

/

நடிகர் ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு பேரம்: அமெரிக்காவில் இருந்து பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

நடிகர் ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு பேரம்: அமெரிக்காவில் இருந்து பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

நடிகர் ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு பேரம்: அமெரிக்காவில் இருந்து பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

3


ADDED : பிப் 20, 2026 10:07 PM

Google News

3

ADDED : பிப் 20, 2026 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது.

நம் நாட்டின் நிழலுலக தாதாக்களில் முக்கியமானவன் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாபைச்சேர்ந்த இவன் மீது, கொலை, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத் தல் உள்ளிட்ட பல வழக் குகள் நிலுவையில் உள்ளன.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை, மஹாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை, நடிகர் சல்மான் கான் மீதான கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கும்பலுக்கு தொடர்புள்ளது.

பல குற்ற வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ், தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கிருந்தபடியே, தன் ஆதரவாளர்கள் வாயிலாக மேலும் பல குற்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகிறான்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிற்கு, சில நாட்கள் முன், 'வாட்ஸாப்' வாயி லாக மிரட்டல் விடுக்கப் பட்டது.

அவரது மேலாளரின், 'வாட்ஸாப்' எண்ணுக்கு சமீபத்தில் வந்த வாய்ஸ் மெசேஜில், 'ரன்வீர் சிங், உங்களையும்,உங்களுடன் இருப்பவர்களையும் நாங்கள் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். எங்களுக்கு தேவை 10 கோடி ரூபாய். 'தராவிட்டால், உங்க ளுடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தொல்லை தருவோம். இறுதியில் உங்களையும் நெருங்குவோம். போலீசுக்குதகவல் தெரிவித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என, தெரிவிக் கப்பட்டது.

அந்த குரல் செய்தியை சோதனை செய்ததில், மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஹரி பாஸ்கர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவன் அமெரிக்காவில் உள்ளான். இது தொடர்பாக அமெரிக்க போலீசாருடன் இணைந்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் திரைப்படம், 1,300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும் பல் மிரட்டல் விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us