நடிகையர் கவர்ச்சி படங்கள் மைசூரு விவசாயி புதிய முயற்சி
நடிகையர் கவர்ச்சி படங்கள் மைசூரு விவசாயி புதிய முயற்சி
ADDED : பிப் 21, 2025 05:40 AM

மைசூரு: தனது வாழை தோட்டத்தில் விளைந்து உள்ள வாழைகள், வாழை இலைகளை பார்த்து யாரும் கண் வைத்து விட கூடாது என்பதற்காக, நடிகையரின் கவர்ச்சி புகைப்படங்களை தோட்டத்தில் தொங்க விட்டு, மைசூரு விவசாயி புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
பொதுவாக விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்கள் நன்கு விளைந்தால், யாருடைய கண்ணும்பட்டு விட கூடாது என்பதற்காக விவசாய நிலத்தில் திருஷ்டி பொம்மைகளை தொங்கவிட்டு இருப்பர். ஆனால், ஒரு விவசாயி புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.
மைசூரின் நஞ்சன்கூடு கக்கனாடா கிராமத்தில் வசிப்பவர் சோமேஷ். விவசாயியான இவர், தனது 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்து உள்ளார். வாழைகள் நன்கு வளர்த்து உள்ளன. வாழை இலைகளும் அதிகமாக உள்ளன. இதனை யாரும் கண்வைத்து விட கூடாது என்பதற்காக, நடிகையரின் கவர்ச்சி புகைப்படங்களை தோட்டத்தை சுற்றி தொங்க விட்டு உள்ளார்.
இதன் மூலம் வாழை தோட்டத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்; நடிகையரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பர். தோட்டத்தின் மீது கண் விழாது என்பது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்கைக்கு ஏற்ப, அந்த வழியாக செல்வோரும், நடிகையரின் கவர்ச்சி புகைப்படங்களை தான் பார்த்து செல்கின்றனர்.