உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 21, 2024 12:29 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு : உடல் நலம் பாதிக்கப்பட்ட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா, 75, நேற்று அதிகாலை காலமானார்.
கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்கள் ஆதரவு பெற்றவர் நடிகர் சுதீப். இவரின் தாயார் சரோஜா. நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று அதிகாலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர்கள் சிவராஜ்குமார், வினய் ராஜ்குமார், நடிகை தாரா, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை வில்சன் கார்டனில் உள்ள சுடுகாட்டில், சரோஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
