தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரசாரம் செய்ய மாட்டேன் நடிகர் யஷ் திட்டவட்டம்

பிரசாரம் செய்ய மாட்டேன் நடிகர் யஷ் திட்டவட்டம்

பிரசாரம் செய்ய மாட்டேன் நடிகர் யஷ் திட்டவட்டம்


ADDED : பிப் 16, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என, நடிகர் யஷ் கூறியிருப்பது, எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷ் சுயேட்சையாக களமிறங்கினார். ஸ்டார் நடிகர்கள் தர்ஷன், யஷ் உட்பட பலர் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும் வாய்ப்புள்ளது. தொகுதியில் தானே களமிறங்குவதாக சுமலதா பிடிவாதமாக இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதியை விட்டுத்தரும்படி கோரியுள்ளார்.

இன்னும் மாண்டியா தொகுதி இழுபறியில் உள்ளது. இம்முறை பா.ஜ., சார்பிலோ அல்லது சுயேச்சையாக சுமலதா போட்டியிட்டால், நடிகர்கள் பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக, நேற்று நடிகர் யஷ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.

இதனால், சுமலதா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us