நடிகர் யஷ் கூறியதாவது: எனக்கு பேனர் கட்டுங்கள், கட் அவுட் செய்யுங்கள் என, நான் கூறியதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளின்போது, இத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பதை கண்டால், பிறந்த நாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது. என் மீது எனக்கே அருவருப்பாக இருக்கிறது.
மீண்டும் கொரோனா அதிகரிப்பதால், யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்பதால், இம்முறை நான் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என, முடிவு செய்திருந்தேன். இதை நேரடியாக கூறினால், ரசிகர்கள் வருத்தமடைகின்றனர். கொண்டாடட்டும் என நினைத்தால், இப்படி நடந்து விடுகிறது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், குடும்பத்தினரின் கதி என்ன? யார் வேண்டுமானாலும் பண உதவி செய்வர். ஆனால் இறந்த மகன் மீண்டு வருவானா? ரசிகர்கள் யாரும் பேனர் கட்டாதீர்கள். பைக்கில் என்னை பின் தொடர்ந்து வராதீர்கள்.
நற்பணிகளை செய்யுங்கள், அதுவே போதும். உங்கள் நல்வாழ்க்கைக்கு, என்ன தேவையோ அதை செய்யுங்கள். உங்கள் தாய், தந்தையை மதியுங்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.