உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 20, 2026 09:40 PM
ADDED : நவ 20, 2026 09:40 PM

அ நிறம் | அளவு
‘தாதா’ பெயரில்
ஜாக்கெட் விற்பனை
கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ‘தாதா’ லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசில் பிடிபட்டபோது, அவர் அணிந்திருந்தது போன்ற ஜாக்கெட்டுகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமோகமாக விற்பனையாகின்றன. ‘கருப்பு, ஆரஞ்சு வண்ணம் கொண்ட இந்த ஜாக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன; மீண்டும் ஸ்டாக் வரவழைத்து இருக்கிறோம்’ என்று வியாபாரி கூறும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது.
