ரயிலில் பயணிகள் கூடுதலாக கொண்டு செல்லு்ம உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம்: மத்திய அமைச்சர்
ரயிலில் பயணிகள் கூடுதலாக கொண்டு செல்லு்ம உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம்: மத்திய அமைச்சர்
ADDED : டிச 17, 2025 10:06 PM

புதுடில்லி: ரயிலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கொண்டு செல்லப்படும் உடைமைகளுக்கு பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
பயணிகள் கொண்டு பொருட்களுக்கு விமான நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ரயில் நிலையங்களிலும் கடைபிடிக்கப்படுமா என எம்பி வேமிரெட்டி பிரபாகர் ராவ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: ரயில் பெட்டிகளில் வகுப்புகளுக்கு ஏற்ப பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியான உடைமைகளை கொண்டு செல்லும் பயணிகள், பொருட்களுக்கு கூடுதலாக 1.5 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட அளவை தாண்டி கொண்டு செல்லப்படும் டிரங்க் பெட்டிகள், சூட்கேஸ்கள் , சரக்குப் பெட்டிகள் போன்ற பொருட்கள் பயணிகள் பெட்டிகளில் அல்லாமல், சரக்கு பெட்டிகளில் அல்லது பார்சல் பெட்டிகளில் முன்பதிவு எடுத்துச் செல்ல வேண்டும்.வணிகப் பொருட்களை தனிப்பட்ட உடைமகைளாகப் பெட்டியில்முன்பதிவு எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வகுப்பு வாரியாக கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படிஇரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் ஒரு பயணி 35 கிலோ வரை இலவசமாகவும், 70 கிலோ வரை வழக்கமான கட்டணம் செலுத்தியும் பொருட்களை கொண்டு செல்லலாம்
படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வோர் 40 கிலோ வரை இலவசமாகவும் , அதிகபட்சமாக 80 கிலோ வரையிலும் பொருட்களை கொண்டு செல்லலாம்.
மூன்றாம் வகுப்பு ஏசி அடுக்கு அல்லது இருக்கை வசதி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 40 கிலோ வரை இலவசமாக பொருட்களை கொண்டு செல்லாம். அதிகபட்ச வரம்பும் இதுவேயாகும்.
முதல் வகுப்பு மற்றும் ஏசி 2 அடுக்கு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் 50 கிலோ வரை இலவசமாக பொருட்களை கொண்டு செல்லலாம். அதிகபட்சமாக 100 கிலோ வரை கொண்டு செல்ல அனுமதி.
ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் 70 கிலோ வரை இலவசமாகவும், 150 கிலோ வரை வழக்கமான கட்டணம் செலுத்தியும் பொருட்களை கொண்டு செல்லலாம்டிரங்க் பெட்டிகள், சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகளானது 100 செமீ அகலம்
60 செமீ அகலம்
25 செமீ உயரம் இருக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

