டில்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
டில்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
UPDATED : ஆக 03, 2024 01:32 PM
ADDED : ஆக 03, 2024 01:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஜூலை 31 ல் இஸ்மாயில் ஹனீயா என்ற ஹமாஸ் தளபதியை டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொன்றது. இதன் காரணமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் ஏதும் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து தலைநகர் டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் இது தொடர்பான ஒரு கபாத்ஹவுஸ் என்ற அலுவலக கட்டடத்திலும், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.