பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே தலையாய முன்னுரிமை: பிரதமர் மோடி
பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே தலையாய முன்னுரிமை: பிரதமர் மோடி
ADDED : செப் 17, 2026 04:18 PM

கோல்கட்டா: பெண்கள் வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:இந்த ஆண்டு மே 4 ம் தேதி மேற்கு வங்கம் ஒரு புதிய மாற்றத்தை தேர்வு செய்தது. இந்த மாற்றத்தில் தாய்மார்களும் சகோதரிகளும் முக்கிய பங்காற்றி உள்ளனர் என்பதை நான் அறிவேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல இன்னல்களை சந்தித்து உள்ளீர்கள். பல விஷயங்களுக்காக நீண்ட நாட்கள் காத்து இருந்துள்ளீர்கள். அதனால் தான் பேச்சு குறைவு செயல் அதிகம் என்ற முக்கிய கொள்கையை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல திட்டங்கள் துவங்கப்பட்டன. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் குறைக்கப்படவில்லை. இடைத்தரகர்கள் இல்லை. மேற்கு வங்கத்தில் பணத்தை குறைப்பது என்பது இனியும் நடக்காது.
பெண்களின் வாழ்க்கையில் முழுவதும் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை. தாய்மார்களுக்கும், மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
