இரவில் ஏழை, எளியவர்களுக்கு போர்வை வழங்கிய ஆதித்யநாத்
இரவில் ஏழை, எளியவர்களுக்கு போர்வை வழங்கிய ஆதித்யநாத்
ADDED : ஜன 07, 2024 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோராக்பூர்: உ.பி. மாநிலம் கோராக்பூர் சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இரவில் கடுங்குளிரில் வாடும் ஏழை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு கம்பளி போர்வை, மற்றும் உணவு வழங்கினார்.
டில்லி, உ.பி., வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று கோராக்பூரில் , பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவில் கடுங்குளிரில் வாடும் ஏழை, எளிய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு கம்பளி போர்வை, மற்றும் உணவு வழங்கினார். இதன் புகைபடங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.