sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 டில்லி அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9ல் துவக்கம்

/

 டில்லி அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9ல் துவக்கம்

 டில்லி அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9ல் துவக்கம்

 டில்லி அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 9ல் துவக்கம்


ADDED : மார் 08, 2026 01:01 AM

Google News

ADDED : மார் 08, 2026 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அரசு மற்றும் அரசு உதவி பெறும், 12 சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, 9ம் தேதி 'ஆன் - லைன்' வாயிலாக துவங்குகிறது.

இதுகுறித்து, டில்லி அரசின் கல்வி இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும், 12 சிறப்பு பள்ளிகளில் 2026 - 2027ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, 9ம் தேதி துவங்குகிறது.

நர்சரி வகுப்பு முதல் பிளஸ்2 வரை சேர்க்கை நடைபெறும். ஆன் - லைன் வாயிலாக 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து, மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர், 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆவணங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

சேர்க்கை நடைமுறை ஏப்ரல் 2ம் தேதி நிறைவடையும். விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், குலுக்கல் முறையில் மாணவ - மாணவியர் தேர்வு செய்யப் படுவர்.

இந்தக் குலுக்கல், 24ம் தேதி காலை 11:00 மணிக்கு பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் நடத்தப்படும்.

ஆவணங்களைச் சரிபார்த்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ - மாணவியர் இறுதிப் பட்டியல் 25ம் தேதி வெளியாகும்.

முதல் பட்டியல் வெளியான பின், காலியிடங்கள் இருந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவ - மாணவியர் பட்டியல் ஏப்ரல் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை பரிசீலனை செய்யப்பட்டு, இரண்டாம் சேர்க்கை பட்டியல் வெளியிடப்படும்.

பார்வைக் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடு உட்பட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக டில்லி அரசு, 12 சிறப்பு பள்ளிகளை நடத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us