டில்லி எய்ம்ஸ்-ல் அனுமதிக்கப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 'டிஸ்சார்ஜ்'
டில்லி எய்ம்ஸ்-ல் அனுமதிக்கப்பட்ட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 'டிஸ்சார்ஜ்'
ADDED : ஜூன் 27, 2024 03:05 PM

புதுடில்லி: உடல்நலக்குறைவால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி (96) குணமடைந்து வீடு திரும்பினார்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே., அத்வானி, வயது மூப்பின் காரணமாக சமீபகாலமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து இவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தற்போது அத்வானியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், இருந்தாலும் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.