நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, 96, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எந்த வகையான நோய் பாதிப்புக்கு அத்வானி சிகிச்சை பெறுகிறார் என்ற விபரம் தெரியவில்லை.