ADDED : நவ 29, 2024 12:08 AM
பெங்களூரு; நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பி.எம்.டி.சி., தன் வருவாயை அதிகரிக்க ஆர்வம் காட்டுகிறது. பஸ்களில் விளம்பரம் செய்ய வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது.
'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்குவதாக, முதல்வர் சித்தராமையாவும், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் அவ்வப்போது கூறி வருகின்றனர். இன்றைக்கும் போக்குவரத்துக் கழகங்கள், நஷ்டத்தில் இருந்து மீளவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
வருவாயை அதிகரித்து, நஷ்டத்தை சமாளிக்க பி.எம்.டி.சி., திட்டம் வகுத்துள்ளது. பஸ்களில் விளம்பரம் செய்ய வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது. இதுவரை பி.எம்.டி.சி., பஸ்களின் பின் பகுதியில் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பஸ்களின் முன் பகுதி, பின்பகுதி கண்ணாடிகளை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
முதல் கட்டமாக 3,000 பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்க தயாராகிறது. இதனால் மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, பி.எம்.டி.சி., அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

