ADDED : அக் 24, 2025 08:13 PM

மும்பை: விளம்பர ஜாம்பவன் பத்மஸ்ரீ விருதுபெற்ற பியூஷ் பாண்டே 70 உடலநலக்குறைவால் காலமானார். தொலைக்காட்சிகளில் வெளியாகும் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களில் இவர் உருவாக்கிய வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. இந்திய விளம்பரத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். ஏசியன் என்ற பெயின்ட் நிறுவனத்திற்கு இவரின் 'மகிழ்ச்சிக்கும் நிறமுண்டு' என இந்தியில் இவர் உருவாக்கிய வாசகம் மிகவும் பிரபலமானது.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இவர் உருவாக்கிய ‛‛ஆப் கி பார் மோடி சர்கார்'' என்ற வாசகம், மிகவும் பிரபலமானது.
மும்பை சிவாஜிபார்க் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடலநலக்குறைவால் காலமானார். 2016-ல் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.
பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

