ஆமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை
ஆமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை
UPDATED : ஜூலை 12, 2025 02:34 AM
ADDED : ஜூலை 12, 2025 02:23 AM

புதுடில்லி: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.
இதில் ஒரேயொரு பயணியை தவிர, 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது..
இதன் அறிக்கையை பார்லிமென்ட் குழுவிடம் சம்பித்துள்ளது. இதன் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12) நள்ளிரவு வெளியானது. அந்த அறிக்கையில், சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழு நேற்று (ஜூலை 11) அறிக்கை வெளியிட இருந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ளது.