சிங்கப்பூர்-சென்னை விமானம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து: தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அவதி
சிங்கப்பூர்-சென்னை விமானம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து: தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அவதி
ADDED : ஆக 03, 2025 09:02 PM

புதுடில்லி; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு AI 349 விமானம் புறப்பட தயாராக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் புறப்படும் சிறிதுநேரத்துக்கு முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், விமானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே திட்டமிடப்பட்ட விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளை விரைவில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கான தங்குமிடம் வழங்கப்படும். எதிர்பாராத இந்த சிரமத்தை குறைக்க சிங்கப்பூரில் உள்ள விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

