ஏர் இந்தியாவை விடாது துரத்தும் பிரச்னை; தொழில்நுட்ப கோளாறால் ஜெய்ப்பூருக்கு 'ரிட்டர்ன்'
ஏர் இந்தியாவை விடாது துரத்தும் பிரச்னை; தொழில்நுட்ப கோளாறால் ஜெய்ப்பூருக்கு 'ரிட்டர்ன்'
UPDATED : ஜூலை 25, 2025 03:58 PM
ADDED : ஜூலை 25, 2025 03:54 PM

ஜெய்ப்பூர்: மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே ஜெய்ப்பூர் திரும்பியது.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு AI - 612 என்ற ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.35க்கு புறப்பட்டது. விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட 18 நிமிடங்களுக்கு பின்னர், அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, 18 நிமிடங்களிலேயே மும்பைக்குச் செல்லாமல் நடுவழியில் மீண்டும் ஜெய்ப்பூருக்கே விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியாக என்ன கோளாறு என்பது பற்றிய எந்த விவரங்களும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை.
ஆமதாபாத் விபத்தைத் தொடர்ந்து, அண்மைக் காலமாக ஏர் இந்தியா விமான சேவையில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது, பயணிகள் மத்தியில் ஒருவித அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

